Sunday, December 20, 2015

இலங்கையில் மாபெரும் மீலாத் விழா....!

கல்முனை ஈஸ்டன் அஹ்லுஸ் ஸுன்னாஹ் பவுண்டேஷன் ஏற்பாட்டில் உலகறிந்த தென்னிந்திய மார்க்க அறிஞர் "அப்லளுள் உலமா" M.ஷேக் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A ஹழ்ரத் அவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கிழக்கு மாகாண சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு’’ இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 28ஆம் திகதி கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் திறந்த வெளி மைதானத்திலே மிகப்பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது!!
.
பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய உறவுகள் சங்கமிக்கவிருக்கும் இந்நிகழ்விற்கு குடும்பசகிதம் அலைகடலென திரண்டுவருமாறு அன்பாய் அழைக்கின்றோம்!

Saturday, December 19, 2015

திருவண்ணாமலை நடைபெற்ற மீலாது நபி விழா..!

 திருவண்ணாமலை முகல்புறா தெரு முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் மீலாது விழா கமிட்டி சார்பில்
சுமார் 40 வருடங்களாக தொடர்ந்து மீலாதுவிழா நடைபெற்று வருகிறது
17-12-2015 அன்று இரவு10 மணிஅளவில் சத்திய சஹாபாக்கள் பார்வையில் சர்தார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
என்கிற தலைப்பில்
மொளவி அல்ஹாபிழ் அப்ஸலுல் உலமா
M.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி M.A
அவர்கள் சிறப்பு பேருரை ஆற்றினார்கள்..
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Thursday, December 17, 2015

திருவண்ணாமலையில் மாபெரும் மீலாது விழா...!

இன்ஷா அல்லாஹ் புனிதம் வாய்ந்த மௌலிது மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தில் நடைபெறும் அதிகமான மீலாதுப் பெருவிழாக்களில்,ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப் பேருரையாற்ற இருக்கின்றார்கள்.

இன்று இரவு 10 மணிக்கு 17/12/2015
சத்திய சஹாபாக்கள் பார்வையில் சர்தார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்கிற தலைப்பில் திருவண்ணாமலை முகல்புறா தெரு
முஸ்லிம் உயர் நிலை பள்ளியில் ஹஜ்ரத் அவர்கள் உரையற்ற இருக்கின்றார்கள். அனைவரும் கலந்துக்கொண்டு பயண்டையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

சென்னையில் மாபெரும் மீலாத் பேரணி & மாநாடு...!

முஸ்லிம்களே! பெருமானாரின் புகழ்பாட அலை கடலென திரண்டு வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்!
.
நாள்: 24-12-2015 வியாழக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி
பேரணி புறப்படும் இடம்: சென்னை புளியந்தோப்பு மஸ்ஜித் அமீன்
மாநாடு நடைபெறும் இடம்: நியூ பேரஹன்ஸ் ரோட், தாஷ்மக்கான்.
.
அழைக்கும் 

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் மற்றும்
தமிழ்நாடு சுன்னத் ஜமாத்.