Friday, July 26, 2013

பொய்யான பேச்சு..!

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 
யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! 

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 1903

Wednesday, July 24, 2013

ரமலான் மாதம் தினம் “சுவனத் தென்றல்” நிகழ்ச்சி

“சுவனத் தென்றல்” நிகழ்ச்சி Vasanth TV இல் ரமலான் மாதம் தினம் தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி அதிகாலை 03.30 மணி முதல் 04.00 மணி வரை ஒளிபரப்பாகின்றது. காணத்தவராதீர்கள்.

Vasanth TV இன் இணையத்தளத்திலும் அதிகாலை 03.30 மணி முதல் 04.00 மணி வரை நேரடியாக பார்வையிடலாம்.
http://www.vasanth.tv/livetv.php

சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A

Tuesday, July 23, 2013

நோன்பு திறக்கும் துஆ..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு திறக்கும் போது அல்லாஹும்ம லக சும்து வஅலா ரிஸ்கிக அப்தர்து என்று சொல்வார்கள்.
அறிவிப்பாளர்: முஆத் இப்னு ஸுஹ்ரா (ரலியல்லாஹு அன்ஹு )
நூல்: அபூ தாவூத் 2011

Sunday, July 21, 2013

நான் நோன்பாளி..!

சுன்னத் ஜமாத் சகோதர்களே..!
தங்களிடம் குழப்பவாதிகள் வந்து
1.தராவீஹ் 20 ரக்அத்கள் கிடையாது..?
2.லைலத்துக் கதர் இரவு 27 கிடையாது..?
3.நோன்பு திறக்கும் நிய்யத்தில் இன்று பிடிக்க என்று கூறுவது கூடாது..?
என்று கூறி சண்டைக்கு இழுத்தால் அப்போழுது வீண் விவாதம் செய்யாதீர்கள்..
நீங்கள் அவர்களிடம் சொல்லி விடுங்கள் "நான் நோன்பாளி" என்று மீண்டும் அவர்கள் சண்டைக்கு இழுத்தால்..
அவர்களை அல்லாஹ் பார்த்து கொள்ளட்டும்..!
யா அல்லாஹ் குழப்பவாதிகளின் தீங்கை வீட்டு பாதுகாப்பாயக..!

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்! என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால், நான் நோன்பாளி! என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான் தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 1904

Thursday, July 18, 2013

“சுவனத் தென்றல்” நிகழ்ச்சி...!

“சுவனத் தென்றல்” நிகழ்ச்சி Vasanth TV இல் ரமலான் மாதம் தினம் தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி அதிகாலை 03.30 மணி முதல் 04.00 மணி வரை ஒளிபரப்பாகின்றது. காணத்தவராதீர்கள்.

Vasanth TV இன் இணையத்தளத்திலும் அதிகாலை 03.30 மணி முதல் 04.00 மணி வரை நேரடியாக பார்வையிடலாம்.
http://www.vasanth.tv/livetv.php

சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A

Tuesday, July 16, 2013

Sunday, July 14, 2013

தராவிஹ் 20 ரக்அத்கள்:

தராவீஹ் எத்தனை ரகாஅத்?
http://youtu.be/Gh37K0QN9qE

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு 
பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.
யஸீத் இப்னு ரூமான்
முஅத்தா, பைஹகி 1-496, ஷரஹுன்னியாயா 1-104


ஹஸ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மக்கள் (சஹாபாக்கள்) 20 ரகஅத்துக்கள் தொழுபவர்களாக இருந்துள்ளனர்.
சாயிப் இப்னு யஸீத்
ஸுனன் பைஹகி , பத்ஹுல் பாரி , 5 - 157, ஐனி (புகாரி விரிவுரை) 11 - 127 

Friday, July 12, 2013

நோன்பு கடமை..!

உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும்
நோன்பு வைப்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆவதற்காக..
அல்குர் ஆன் - 2:183

ரமலான் தொட்பான சந்தேகளுக்கு..!
1.இனிய ரமலானே வருக..!
http://youtu.be/obQAHUzkq-E

2.சிறுவர் சிறுமிகள் நோன்பு வைக்கலாமா..?
http://youtu.be/i5N9vEyjQ68

3.நோன்பு வைப்பதற்க்கு உலகம் முழுவதும் ஒரே பிறையா..?
http://youtu.be/4KNhYXrd3KI

4.பயணிகள் நோன்பு வைப்பது நல்லதா இல்லை விடுவது நல்லதா..?
http://youtu.be/sqr-95xCnbU

5.தராவீஹ் எத்தனை ரகாஅத்?
http://youtu.be/Gh37K0QN9qE

Wednesday, July 10, 2013

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்..!

இன்று(10/07/2013) ரமலான் பிறை 1 மஹ்ரீப் முதல் அரம்பம் ஆகிறது..
ஆதலால் இன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெறும் தராவீஹ் தொழுகையில் கலந்துக் கொண்டு ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய நல்அமல்களை செய்து..
இன்மையுளும், மறுமையுளும் வெற்றி பெறுவோமகா..!

Tuesday, July 9, 2013

தமிழகத்தில் இன்று(7/09/2013) ரமலான் நோன்பு இல்லை..!

இன்று தமிழகம் முழுவதும் பிறை தென்படத்தால் இன்று (9/7/2013) ரமலான் மாதம் பிறை 1 தொடங்க வில்லை. அதனால் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து. இன்ஷா அல்லஹ் நாளை ரமலான் மாதத்தின் பிறையை மஹரீப் தொழுகைக்கு பிறகு தேடுவோம்..
இவண்:
மாநில ஜமாத்துல் உலமா சபை
தமிழ்நாடு..

பிறை தென்பட்டால் அறிவிக்கவும்..!

இன்று மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை தெரியபடுத்தவும் .

email: sheikjamali786@gmail.com

Monday, July 8, 2013

பிறை பார்த்தல்..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: 
ரமழான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) - ஸஹிஹுல் புகாரி 1906

Saturday, July 6, 2013

Tuesday, July 2, 2013

இனிய ரமலானே வருக..!

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

நமது இனையத்தளத்தில் www.sheikjamali.blogspot.com பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்..