Monday, July 7, 2014

நான் நோன்பாளி..!

சுன்னத் ஜமாத் சகோதர்களே..!
தங்களிடம் குழப்பவாதிகள் வந்து
1.தராவீஹ் 20 ரக்அத்கள் கிடையாது..?
2.லைலத்துக் கதர் இரவு 27 கிடையாது..?
3.நோன்பு திறக்கும் நிய்யத்தில் இன்று பிடிக்க என்று கூறுவது கூடாது..?
என்று கூறி சண்டைக்கு இழுத்தால் அப்போழுது வீண் விவாதம் செய்யாதீர்கள்..
நீங்கள் அவர்களிடம் சொல்லி விடுங்கள் "நான் நோன்பாளி" என்று மீண்டும் அவர்கள் சண்டைக்கு இழுத்தால்..
அவர்களை அல்லாஹ் பார்த்து கொள்ளட்டும்..!
யா அல்லாஹ் குழப்பவாதிகளின் தீங்கை வீட்டு பாதுகாப்பாயக..!

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்! என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால், நான் நோன்பாளி! என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான் தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 1904


கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 1903

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........