Wednesday, June 5, 2013

கபுருகளை தரைமட்டம் ஆக்குவது நபி வழியா..?

2 comments:

  1. ''ஸவ்வா'' என்றால் என்ன ?

    قال الإمام مسلم ـ رحمه الله ـ في " صحيحه " ( كتاب الجنائز ، باب الأمر بتسوية القبر ) ( ح 969 )
    حدثنا يحيى بن يحيى وأبو بكر بن أبي شيبة وزهير بن حرب قال يحيى أخبرنا وقال الآخران حدثنا وكيع عن سفيان عن حبيب بن أبي ثابت عن أبي وائل عن أبي الهياج الأسدي قال قال لي علي بن أبي طالب ألا أبعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم أن لا تدع تمثالا إلا طمسته ولا قبرا مشرفا إلا سويته
    صحيح مسلم 969,1609 
    அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச்சிலைக(ள் மற்றும் உருவப்படங்க)ளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரைமட்டமாக்காமல் விடாதீர்!“என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்)   நூல்: முஸ்லிம் 

    இவ்வளவு தெளிவான கட்டளைக்குப் பின்னரும் போலிகள் இந்த நபிமொழிக்குத் தவறான பொருள் கூறி மக்களை வழி கெடுத்து வருகின்றனர் மேற்கண்ட நபிமொழியில் 'கப்ரைத் தரை மட்டமாக்காமல் விடாதே' என்று கூறப்படவில்லை. மாறாக 'கப்ரைச் சீர்படுத்து' என்று தான் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
    'தரை மட்டமாக்கு' என்று நாம் பொருள் கொண்ட இடத்தில் ஸவ்வைத்தஹு என்ற மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. 'ஸவ்வா' என்பதிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் 'சீர்படுத்துதல்' என்பது தான் எனவும் வாதிடுகின்றனர்.
    கப்ரை அழகான முறையில் கட்ட வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது என்று சாதிக்கின்றனர்.
    வானத்தை ஒழுங்கு படுத்தினான் என்று பல வசனங்களில் இதே 'ஸவ்வா' என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் வானத்தைத் தரை மட்டமாக்கினான் என்று பொருள் கொள்வீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர்.
    'ஸவ்வா' என்பதன் பொருள் சீர்படுத்துவது தான். ஒவ்வொன்றையும் சீர்படுத்தும் முறைகள் வெவ்வேறாகவுள்ளதால் இடத்திற்கு ஏற்ப அதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை இவர்கள் அறியாததே இந்த விளக்கத்துக்குக் காரணம்.
    கிழிந்த துணியைச் சீராக்கு என்று கூறினால் அதைத் தைக்க வேண்டும் என்று பொருள்.
    அழுக்குத் துணியைச் சீராக்கு என்றால் அதைக் கழுவு எனப் பொருள்.
    அளவுக்குப் பொருந்தாமல் பெரிதாகத் தைக்கப்பட்ட ஆடையைச் சீராக்கு என்றால் அதிகப்படியானதை வெட்டிக் குறைத்தல் என்பது பொருள்.
    இச்சொல்லுடன் சேர்க்கப்படும் அடைமொழிக்கேற்ப பொருளும் மாறும். கிழிந்த, அழுக்கான, பெரியதாக என்பன போன்ற அடை மொழிகள் சேர்க்கப்படும் போது அந்த அம்சத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளைத் தரும்.
    உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும்... என்ற சொற்றொடரில் உயரமாக்கப்பட்ட என்ற அடைமொழி காரணமாக உயரத்தை நீக்குவது தான், அதாவது இடிப்பது தான் இங்கே சரி செய்வது எனக் கூறப்பட்டுள்ளது.
    ""நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி கட்டிய இடத்தில் சில குட்டிச் சுவர்கள் இருந்தன. அதைச் சரி செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (புகாரி 410, 1735, 3963)
    இந்த இடத்திலும் ஸவ்வா என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.
    குட்டிச் சுவருக்கு வெள்ளை அடித்து அழகு படுத்த வேண்டும் என்று நபித்தோழர்கள் பொருள் கொண்டிருந்தால் மஸ்ஜிதுன்னபவிக்குள் இன்று வரை அந்தக் குட்டிச் சுவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் குட்டிச் சுவர்கள் இடிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப்பட்டன."
    " 'உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சரிப்படுத்தாமல் விடாதே!' என்பதற்கு 'தரை மட்டமாக்காமல் விடாதே!' என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது. மேலும் கப்ரின் மேல் வெளிப் பொருள்களால் அதிகப்படுத்தக் கூடாது உடலை அடக்கம் செய்த பின் எந்தஅளவு மண்ணை வெட்டி எடுத்தோமோ அதை மட்டும் போட்டு மூட வேண்டும்.
    உயரமாக கப்ரு தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மண்ணை அதிகமாக்கக் கூடாது.
    (கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807 )

    அதன் அடிப்படையில் சிந்திக்கும் போது கப்ரிலிருந்து எடுக்கப்பட்ட மண் நாளடைவில் படிந்து தரை மட்டமாகி விடும். அதற்கு மேல் இருப்பது அனைத்தும் அதிகமாக்கப்பட்டவை தான். அதிகமாக்கப்பட்டதை அப்புறப்படுத்துவது தான் மேற்கண்ட கட்டளையைச் செயல்படுத்துவதாக அமையும்.

    ReplyDelete
  2. "சவ்வா" என்பதற்கான நேரடி அர்த்தம் சீர்ப்படுத்துவது..

    தாழ்ந்திருப்பதை சீர்ப்படுத்துவது என்றால் உயர்த்துவது. உயர்ந்திருப்பதை சீர்படுத்துவது என்றால் கீழே இறக்குவது..

    கிழிந்திருக்கும் துணியை சீர்ப்படுத்துவது என்றால் தைப்பது. உடைந்ததை சீர்ப்படுத்துவது என்றால் ஒட்ட வைப்பது..

    ஆக, சவ்வா என்பது இடத்தை பொறுத்து வேறுபடும் பொருளாகும். தண்ணீர் மாதிரி. வீற்றுகின்ற பாத்திரத்திற்கு ஏற்ப தண்ணீர் வடிவம் பெறுகிறதில்லையா? அது மாதிரியான ஒரு சொல் சவ்வா !

    இப்போ ஒரு இடத்தில் கட்டிடம் கட்ட போகிறோம், திட்டு திட்டாக மதில் சுவர்கள் உள்ளன.. இந்த இடத்தை "சவ்வா" செய் (சீர் செய்) என்று நான் அரபியில் சொன்னால் அதன் பொருள் என்ன?

    அந்த மதில் சுவருக்கு பெயின்ட் அடித்து, ஊதுபத்தி பற்றி வைக்க வேண்டும் என்பது பொருளா அல்லது அவற்றை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என்பது பொருளா?

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........