பராஅத் இரவின் சிறப்புகளையும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் அறிந்துக்கொள்ள மேலே உள்ள காணொளியை பாருங்கள்.
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.
ைஸயிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822
ஒரு நாள் இரவு நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள். நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
மிஷ்காத் 1305
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.
இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.
முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776
அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு மாஜா 1390
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1. பகைமை பாராட்டுபவன் 2. கொலை செய்தவன்.
அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹு அன்ஹு)
அஹ்மத் 6642

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு
வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு
நோருங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை
மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை
போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு
உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அலீ ரழி...
நூல்: இப்னுமாஜா 1378
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு
நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை
காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று
கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல்
வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு
(பாவங்களை) மன்னிக்கின்றான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்னைஆயிஷா ரழி...
நூல்: திர்மிதி 670
ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும்,ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல்
இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ
அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க
மாட்டார்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் முஹம்மத் பின் அலீ ரழி...
நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1,பக்கம்: 10, எண்: 9
அறிவிப்பவர்: ஹழ்ரத் முஹம்மத் பின் அலீ ரழி...
நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1,பக்கம்: 10, எண்: 9
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DTmW0DMWLUVw&h=jAQGu7Q6W
ReplyDeletekanmani yenbadhai vida mookku oottai yeynbadhu ,,,
ReplyDelete