முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்..!