Thursday, November 27, 2014

புறம் பேசதீர்கள்...!

அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோரசரின் மாமிசத்தை அவர் இறந்து பிணமாக இருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள்.

(அல்குர்ஆன் 49:12)

Sunday, November 23, 2014

இறந்தவரிகளின் கப்ரஸ்தானுக்கு சென்று யாஸீன் சூரா ஓதுங்கள்..!

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:எவராவது கப்ர்ஸ்தானங்களுக்கு சென்று யாசீன் சூராவை ஓதினால் கப்ராளிகளை தொட்டும், வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கை அளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.

நூல்: மிர்காத் 4 - 382

Friday, November 21, 2014

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..!

நாள்: 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 6.30 மணி முதல்
இடம்: சண்முக முதலியார் திருமண மண்டபம், மேற்க்கு மாம்பலம்.்

சிறப்புரை:
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ்ஜமாலி M.A அவர்கள

(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் (தலைப்பு:அருகி வரும் கலாசாரங்கள்,பெருகி வரும் அனாசாரங்கள்).
2.மௌலவி அல்ஹாஜ்.E.S.முஹம்மது அபூபக்கர் உளவி (தலைமை இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மத்) (தலைப்பு:கோமான் நபியின் குடும்ப வாழ்க்கை)
3.அல்ஹாஜ்:M.P.முஹம்மது நாசர்(S.J.P.பொதுச் செயலாளர்) (தலைப்பு :குடி குடியை கெடுக்கும்)
(பெண்களுக்கு தனிஇட வசதி உண்டு)
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜனாஸா தொழுகையில் கலந்துக்கொள்ளுங்கள்...!

யார் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன நாயகமே என கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு நன்மை என்றார்கள்.

நூல்: ஸஹிஹுல் புகாரி 1325

Tuesday, November 11, 2014

TNPSC குரூப் -4 தேர்வு...!

காலிபணி இடங்கள - 4963
விண்ணபிக்க கடைசி நாள்: 12-11-2014

Monday, November 3, 2014

Sunday, November 2, 2014

அஷூரா நோன்பின் விளக்கம்.,!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு),
நூல்: முஸ்லிம் 1977

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு),
நூல்: புகாரி 1592

Saturday, November 1, 2014

தியாகத்தின் மடியில் தாஹா நபியின் குடும்பத்தினர்்..!

நாள்: 02.11.2014 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 4.00 மணி முதல்
இடம்: மஸ்ஜிதே ரசூலே அரபி , நல்லண்ண முதலிதெரு , இராயப்பேட்டை்

சிறப்புரை:
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ்ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)்

அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.