Thursday, October 23, 2014

இஜ்திமா-யே அஹ்லே சுன்னத் வல் ஜமாத் வெற்றிகரமான 4-ஆம் ஆண்டு மாநாடு அழைப்பு்..!

நாள்: 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை
இடம்: ஆஸ்தானயே ஸிபகத்துல்லாஹி தாஜ்புரா ஷரீப், அற்காடு்

சிறப்புரை:
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ்ஜமாலி அவர்கள்

அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, October 22, 2014

சுன்னத் உலமாக்கள் மாநாடு பொதுக்கூட்ட நிகழ்வுகள்.

 ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விசேட அதிதி அபுத்தலாயில் அஷ் ஷெய்கு எம். அப்துல்லாஹ் ஜமாலீ எம்.ஏ.அவர்கள் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்கள். அதில் வஹ்ஹாபிஸத்துக்கு மறுப்பான ஆதாரங்கள் வினாக்கள் என அள்ளி இறைத்த சங்கைமிகு உலமா அவர்கள் கடந்த 14.10.2014 இல் NTJ அமைப்பால் வழங்கப்பட்ட விவாத அழைப்பை ஏற்று; அக்கடிதத்தில் பதில் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த 21.10.2014ம் திகதிக்கு முன் பதிலளித்ததுடன் அனைத்துத் ஸுன்னத் வல் ஜமாஅத் தலைப்புகளிலும் விவாதிக்க வரவேண்டும் அதுவன்றி குறிப்பிட்ட ஒரு தலைப்பில் மாத்திரம் என கூறப்பட்டால் மற்ற அனைத்து ஸுன்னத் வல் ஜமாஅத் விடயங்களையும் ஒப்புக் கொள்வதாக எழுதித்தர வேண்டும் எனவும் பகிரங்கமாக சாவால் விடுத்தார்கள்.மேற்படி தொடர்புகளுக்கு : 0779688999 என்ற தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டது.

Tuesday, October 21, 2014

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் (20-08-2014)அன்று S.J.P.மாநில தலைமையகத்தில் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில்ஹஜரத்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் நிர்வாகிகளுக்கு மார்க்கப் பணி மற்றும் சமூதாயப் பணியை மேன்மைப்படுத்த தக்க ஆலோசனைகளை வழங்கினார்கள். அனைவரும் இந்த பணி தொடர்ந்து நடைப்பெற துஆ செய்யுங்கள்.

Monday, October 13, 2014

ஸயயிதினா உமர் இப்னு கத்தாப் (ரழி) & ஸய்யிதினா உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களின் நினைவு தின சொற்பொழிவு..!

ஸயயிதினா உமர் இப்னு கத்தாப் (ரழி) & ஸய்யிதினா உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களின் நினைவு தின சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.

Monday, October 6, 2014

இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின்மாநில தலைவர்ஹஜ்ரத் ஷேக் M.அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின்இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

Sunday, October 5, 2014

அரஃபா நாள் நோன்பு..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு),
நூல் : முஸ்லிம் 1976
 

Friday, October 3, 2014